Wednesday, May 13, 2026

அரசியலல்ல!, அறிவியல்...!

பப்புவின் என்ட்ரியே பவர்ஃபுல்லாக இருந்ததே
ஸ்டைலாகச் சொன்னார்அவ் வொர்க்கரிடம் - ஃபுல்லாக
டேங்க்கை நீ ஃபில்பண்ணு டேய்என்றார் ஆர்டராய்
ஷாக்காய்அவ் வொர்க்கர் முகம்.
முடியாது சார்என்று முழுக்க மறுத்தான்
படியாதார் போலப் பதிலைத் - தடிமனாய்
சாரிசார் போடவே சான்ஸே கிடையாதே
வாரியே வந்ததே கோவம்.
யாரிடம் டாக்கிங் எனநீ நோபண்ணு
சீரியஸாய் ரெஸ்பெக்ட் செய்நீ - பேரியமாய்
மரியாதை மஸ்ட்சார் மனதினில் வைப்பாயே
அரிய மெசேஜ்இது கேள்.
புரிந்து கொள் சார்நீ பெட்ரோல் போடவே
தெரியவே வாய்ப்பில்லை டெய்லி - வரியுடனே
சிக்னலில் நின்றாலும் சிஸ்டம் மறுக்குமே
வெக்ஸ்ஆகிச் சொன்னான் பாய்.
அடிமையாய் மோடிக்கு ஆகிநீ போனாய்
தடையெனக்கு போட்டானே தானே - விடியல்
ரூலை மாற்றுவேன் ரூலிங் உடையுமே
டூயூட்டியைச் செய்யா விடின்.
ஒழுங்காய் கோபண்ணு உனக்கு மரியாதை
அவ்வளவே லிமிட் எனச்சொல்லி - இவ்வளவாய்
பேட்டரி வெகிக்கிள் பேக்கில் தூக்கிவா
சீட்டே கிடையாது போ.
சைலன்ட்டா வந்தாய் சைலன்சர் இல்லையே
லைட்டாய் மோட்டார் லோடு - வைஃபையே
இல்லாமல் ஓடும் இ-பைக் இதுவென்றான்
செல்லாது பெட்ரோல் இனி.
லிட்டர் கணக்கினில் லிக்யுட் நீஊற்று
பெட்டர் ரிசல்ட் வரும் பைக்குக்கு - முட்டாளே
ஆயில் இல்லாமல் அவ்விடமே நிற்குமே
பெயில்ஆகும் உந்தன் பிளான்.
கியூவிலே நின்றோர் குரூப்பாகச் சிரிக்கவே
வியூவானார் பப்பு விநோதமாய் - பப்ளிக்கில்
ஃபன்னாக மாறியே பைக்கை மிதித்தார்
கண்ணில் தெரிந்ததே ஷேம்.
கரண்ட்டில் ஓடும் கார்பைக் இருந்தும்
பெட்ரோல் எனக்கேட்கும் பெரியோய் - அலர்ட்டாய்
நாலேட்ஜ் வளர்த்தால் நகைப்பில்லை ஊரினில்
காலேஜ் பாடம் இது.

(நகைச்சுவைக்காக மட்டும்)

No comments:

Post a Comment