Sunday, May 24, 2026

தெருவெல்லாம் தேவதைகள்...!

ஈருருளி ஏறி இனிமையாய் ஓட்டினேன்
பாருருவி வந்தேன் பதினெட்டில் - பேறாய்
வேட்கை எனும்அக் கணைபாய மெல்லமெல்ல
ஆட்கொண்டாள் என்னுள் அவள்.

மங்கையவள் மேனி வனப்பால் மயங்கினேன்
கொஞ்சும் மொழியால் குளிர்ந்தேன் - வஞ்சமிலா
மென்மலர் போன்ற அவள்பாதம் நோக்கியே
கன்மங்கள் இன்றி கலந்தேன்.
சந்தியில் சக்கரம் சார்ந்தே மோதிட
கந்த மலரின் மணம்வீச - சிந்தை
துடித்தது காமத்தின் தூண்டலில் மெல்ல
அதிர்ந்தன ஆசைகள் அங்கே.
ஏகாந்த மாகஇருவர் நிற்கையில் ஈர்க்கும்
மோகத்தால் நெஞ்சம் முனங்க - ஏகவே
மாருருக் கொண்ட மதனன் எனைத்தொட
தீருமே என்று தவித்தேன்.
சிதறிய ஏடுகள் சேர்ந்தவன் கையால்
பதறியே நின்றேன் பலவாய் - இதயக்
குமுதம் இதழ்நோக்கிப் பார்த்தேன் வெறிக்க
அமுதம் எனநான் அசைந்து.

கண்ணில் கனிந்த கதிர்வீச்சுப் பார்த்தேன்
மண்ணில் மதனன் வடிவெடுக்க - பெண்ணின்
இடுப்புச் சுருக்கம் எனைஈர்க்க உள்ளம்
தடித்துத் துடித்தே தவித்தேன்.
மெய்க்கும் உடலும் விறைக்கவே நான்நிற்க
அக்கணம் தானாய் அலைமோத - ஒக்க
முலைப்புரி அசைவினில் மோகித் தனைநான்
கலைந்து நின்றேன் கசந்து.
சொல்லால் உரைக்கத் துணிந்தே நான்நிற்க
மெல்லவே சிரித்தாள் மிளிர்ந்து - புல்லார்
கலவி எனும்முன் கதவு திறக்க
அலையாய் அலைந்தேன் அவள்.

தீயும் தணலும் சிதைக்கும் என்நெஞ்சை
மாயும் மங்கையின் மாயம் - நயந்து
புன்னகை அள்ளித் தனைதந்தாள் மெல்ல
அன்பின் அகிம்சை அணைப்பு.
மாறாத காமத்து மாயம் அதுவென்று
பேறாக இன்றும் பிரியாமல் - ஏறிக்
குளிரும் அந்திப்பொழுதில் நினைப்பேன்
இளமை அளித்த இன்பம்.

No comments:

Post a Comment