Sunday, May 24, 2026

கொலைவாள் தொலைத்தவர்கள்...!

வாள்வேல் கரமேந்தி வாழ்ந்தநல் நாட்டினிலே
தாழ்வேற் றிழிசெயல் செய்வோரை - நீள்வேராய்
வெட்டி எறிவோம் விழித்தெழுவோம் பெண்பிள்ளை
கட்டிப் பாதுகாப்போம் காத்து.
மங்கை நலங்காக்க மானுடம் எந்நாளும்
அங்கலாய்ப் பின்றொடர் அநீதி - கொங்கையில்
சீறி எழுவோம் செருக்கோடு தீயவரை
வீறுடன் வீழ்த்துவோம் வேர்த்து.
வஞ்சனை செய்வோரை வையகம் நோக்குமே
நஞ்செனக் கொள்வோம் நயவஞ்சக் - கஞ்சத்
துரோகிகள் தம்மைத் துடைத்துஎறிவோம் சீறி
மரகதம் காப்போம் மனம்!
பூவாய் மலர்ந்ததொரு புதல்வி யினத்தையே
தாவாய் விழுங்கும் தறிகெட்ட - பாவிகள்
நெஞ்சைப் பிளப்போம் நிமிர்தெழுவோம் மானமே
அஞ்சல் இன்றிஅறம் காப்போம்!
ஒன்றிணை வோம்இனி ஊரார் விழித்தெழுவோம்
நன்றி கெட்டவரை நாம்வெட்டுவோம் - குன்றென
நிற்போம் மகளிரைக் காக்கும் நெறிதனில்
பொற்புப் பேணுவோம் பொங்கி!

ஈன்றெடுத்தேன் ஈராறு பெண்மணிகள் தமமை
மன்றில் நடக்கும் வதை கண்டு - குன்றின்
அடுக்குத் துயரம் அடங்காதே நெஞ்சில்
சுடுக்கும் கனலாய்ச் சுழல்.
மானிடர் என்று மதிக்கத் தகாதவர்
வானம் வெட்கும் வஞ்சகர் - ஈனச்
செயலால் மடிந்தாள் சிறுமி! தரியேன்
கோலால் வதைப்பேன் கொதித்து.
மௌனம் கலைப்போம் மகளிரைக் காப்போம்
தீயவர் தம்மைச் சிதைப்போம் - தூய
மலர்ச்சிறுமி போனாள் மறுகி! பழிக்குப்
பழிக்குத் துணிவோம் பணிந்து.
ஆணவம் கொண்ட அறமற்ற கயவரை
நாணமுறச் செய்வோம் நடுநீதி - கோணாமல்
ஒற்றை விதியால் உருட்டுவோம்! பெண்கள்
வெற்றி முழக்கம் விட.
எண்ணும் என்மகள் போல் ஏனைய பெண்மக்கள்
கண்ணும் கருத்தாய்க் காப்பேன்! - மண்மீது
நீதி வெல்லட்டும் நிமிரட்டும் மானமே!
ஆதி அறமே அருள்.

No comments:

Post a Comment