இமைகளின் பின்னே மறைந்திருக்கும்
இரவினைக் கொள்ளையிடும் ஒளியாய்,
சுவாசப் பரிமாற்றங்களின் வழியே
சுட்டெரிக்கிறது இரு உடல்களின் மௌனம்...!
நரம்புகளின் வழியே பாயும்
நாடித் துடிப்பின் ரகசியங்கள்,
வார்த்தைகளை விடுத்து இப்போது
மௌனத்தின் மொழியில் உரையாடுகின்றன...
காலம் தற்காலிகமாய் உறைந்து போக,
இரு துருவங்களும் ஒன்றிணையும் புள்ளியில்,
நகர மறுக்கும் நொடிகள் யாவும்
நமக்கான பிரபஞ்சத்தை சமைக்கின்றன...!
பார்வைகள் மட்டுமே
பரிமாறிக் கொள்கிறோம்,
வார்த்தைகள் தீர்ந்துவிடுமென்ற
பேராசையில் அல்ல...!
நெருங்கிவிட்டால் இந்த
அழகிய தூரம்
தொலைந்துவிடுமென்ற பயத்தில்!
விரல் நுனிகள் கூட
தீண்டிக் கொள்ளவில்லை...
ஆனாலும்!
நனைந்துதான் போகிறது மனம்...
உன் நினைவுகளின் சாரல் பட்டு...!
சுவாசக் காற்றுகள் மோதி
சூடேறும் நொடிகளின் நடுவே,
விலக நினைக்கும் வெட்கத்தை
சிறைபிடிக்கிறது உனது ஆளுமை...!
இதழ்களின் அழுத்தத்தில்
இடறி விழுகிறது காலத்தின் கணக்கு;
இமை மூட மறுக்கும் விழிகளுக்குள்
இடி மின்னலாய் அரங்கேறுகிறது தீண்டல்...!
கட்டுப்பாடுகள் உடைந்து சிதற,
கைகளின் பிடிக்குள் கரைகிறது தேகம்;
அத்துமீறல்களே விதியாகும் போது
No comments:
Post a Comment