திரைப்பட இயக்குநர் கே ராஜன் அவர்கள் உயிர்நீத்தார்...!
அரும்பணிக்கு வாய்த்த அரும்பரிசாய்த் தொட்டுப்
பெருமைசேர் ராஜன் பிறந்தார் - திரையினில்
முத்திரை பதித்த முதற்படமே சீர்மிகுந்த
நெறிபெற்ற பிரம்மச் சாரிகள்.
ஊருக்கே நன்மையினை உன்னியே தந்திங்கு
சீருற்ற மாரியம்மன் சிந்தையினில் - பேருற்ற
நம்மூரு மாரியம்மா நாடி யியக்கினாரே
தம்முயிராய்த் தேர்ந்த தமிழ்.
நெஞ்சினில் பொங்கியெழும் நேர்மைத் திறத்தினையே
வஞ்சமில் லாமல் வகுத்துமே - கொஞ்சும்
திரைப்படமாய் ஈந்தாரே சேவைக்குப் பரிசாய்
நிறைவுற்ற உணர்ச்சிகள் தான்.
இரட்டையராய்ப் பாய்ந்து திரையுலகில் என்றும்
திரட்டினார் செல்வம் திறமாய் - உரத்தசொல்லால்
டபுள்சென்றே தந்து தனி முத்திரைபதித்த
வள்ளலென வாழ்ந்தார் மகிழ்ந்து.
அவள்பாவம் என்றே அருமையாய்த் தந்து
நினைக்காத நாளில்லை நெஞ்சில் - அனைத்துமே
ஆக்கமாய் ஈந்தாரே அரும்பணிக்குப் பரிசாக
ஊக்கத்தின் உறைவிடமாய் நின்று.
பாம்புச் சட்டையோடு பார்புகழும் மாண்பினராய்
மேம்பட்ட துணிவோடு நின்றுமே - மேம்படவே
நின்றாரே என்றும் நெறிதவறா நேர்மையினால்
வென்றாரே நெஞ்சங்களை விடுத்து.
பகாசூரன் வேடமும் பாரினில் அன்னார்
மகாநடிகராய்த் தந்த மாண்பே - சிகரமாய்
அவர்செய்த சேவைக்கு அரும்பரிசாகத்
தவழ்கலைக் கோலங்கள் தாம்.
மேடை முழக்கத்தால் மெய்மை உரக்கரைத்து
கேடில்லா நல்வழியே காட்டியே - நாடறிய
சினிமாவின் காவலனாய் சீருடனே நின்றார்
இனிமைசேர் ராஜன் இவர்.
அடையாற்றின் வெள்ளத்தில் ஆருயிரை விட்டு
மடையுடைந்த கண்ணீராய் மாற்றிக் - கடையாத்
துயரினிலே ஆழ்த்தித் துடிதுடிக்க வைத்தார்
வியனுலகில் ஏனோ விரைந்து.
மண்ணில் மறைந்தாலும் மாண்புடையார் செய்தவொளி
விண்ணில் சுடராய் விளங்குமே - கண்ணியமாய்த்
தந்த திரைப்படங்கள் தாம்செய்த நற்பணிக்குப்
பிந்தாத நற்பரிசாம் பேசு.
No comments:
Post a Comment