தமிழ்நாடே தாயகம்என் றேமுழங்கிக் கட்சி
அமைத்தபின்பும் ஏன்இந்த மாயம்? — கமிட்மெண்ட்
இல்லாது கான்செப்ட்டை மாற்றிநீ பேசுகின்றாய்
திராவிடன் என்றுநீ ஏனோ?
கன்பியூஷனில் மூழ்கிநீ கொள்கை வகுத்தாயோ?
இன்பியூஸ் செய்யாதே ஏதேதோ — ஐடியா
இல்லாமல் தமிழைத் திராவிடமாய் மாற்றுகின்றாய்
ஸ்டைலாகப் பேசிநீ தான்!
எலெக்ஷனில் தோற்றுநீ ஈகோவை விடாமல்
கலெக்ஷன் ஆக்குகின்றாய் வார்த்தை — டைரக்ஷன்
தெரியாமல் தமிழைத் திராவிடமாய் சொன்னாய்
செலெக்ஷனே தப்பாகு மே!
பியூர் தமிழ் பேசாமல் இங்கிலீஷைக் கலந்துநீ
லெக்சர் கொடுப்பதேன் மேடையில்? — ஸ்ட்ரக்சர்
இல்லாமல் கொள்கை இடிந்து விழுகுதடா
பிக்சர்காட் டாதே நீவந்து!
பப்ளிிக்கின் நாடி அறியாமல் பேசிநீ
டாபிக்கை மாற்றத் துணிகின்றாய் — லாஜிக்கில்லை
தமிழனென்றால் தமிழனென்று சொல்லடா, வீணே
லேபல்ஏன் மாற்றுவாய் நீ?
ஆக்டிங்கை மேடையில் காட்டாதே, அரசியலில்
ஃபேக்டைநீ பேசப் பழகுவாய் — இம்பாக்ட்
இல்லாத வார்த்தை இழப்பையே தந்திடுமே
ஸ்ட்ரிக்டாகக் கொள்கை வைப்பாய்!
ஐடென்டிட்டி காக்கத் தெரியாமல் எந்நாளும்
கம்யூனிட்டி அரசியல் செய்கின்றாய் — கிராவிட்டி
இல்லாத பேச்சால் சிரிப்பாய் சிரிக்குதே
ரியாலிட்டியைப் பார்நீ இனி!
லாங்குவேஜ் தமிழிருக்க, திராவிடா என்றொரு
விண்டேஜ் முகமூடி ஏனடா? — காட்டேஜ்
அரசியலை விட்டுநீ நாட்டை வழிநடத்த
கரேஜுடன் வாநீ எழுந்து!
போக்கஸ் இழந்துநீ டயலாக் பேசினால்
போனஸா கிட்டும் உனக்கு? — மைனஸ்தான்
அரசியலில் உன்றன் நிலைமை எனப்புரிந்து
ஜீனியஸ்போல் பேசாதே நீ!
லீடராய் மாறநீ ஆசைப் படுகின்றாய்
ரீடராய் மட்டும்நீ போதாது — ஃபீடராய்
உண்மைத் தமிழரசியலை நீசெய்தால் வெல்லலாம்
பிளண்டரை மாற்றுவாய் நீ!
No comments:
Post a Comment