Monday, May 11, 2026

தங்கிலிஷ் லவ் வெண்பாக்கள்


ஆன்லைனில் மெசேஜ் அனுப்பி வெய்ட் பண்ணி
பான்பார் தியேட்டரில் பார்த்தோமே - சீன்மிஸ்
பண்ணாமே ஸ்டேட்டஸ் போட்டு ஷேர்பண்ணி
என்ஜாய் பண்ணினோம் நாம்.

சேட் பண்ணி லவ்வை கன்பார்ம் பண்ணினோம்
மீட் பண்ணி கிப்ட் கொடுத்தோம் - ஹார்ட்
துடிக்கவே பார்த்தோம் ஸ்மைல் பண்ணி மெல்ல
படித்தோம் காதல் புக்.

பிளாக் பண்ணி வாட்ஸ்அப் மெசேஜ் இக்னோர் பண்ணி
செக் பண்ணிப் பார்த்தேன் ஸ்டேட்டஸை - லாக்
பண்ணியே ஹார்ட்டை கோபமாய் வைத்தாலும்
மிஸ்பண்ணி வாடுதே மைண்ட்.

மிஸ்பண்ணி டெய்லி மெமரீஸ் பார்த்தேநான்
டிஸ்ப்ளேவில் உன்னையே தேடினேன் - லாஸ்பண்ணி
உன்வாட்ஸ்அப் சாட்டை உருகுதே ஹார்ட்டு
பெயினோடு வாழுது லைஃப்.

முடிந்தது உனக்கோ காதல் எனக்கே
முடிந்தது லைஃப் எனச் சொன்னேன் - இடிந்ததே
ஹார்ட்டுமே பாவம் லவ்வை நீ கட் பண்ணி
மூவ்ஆன் பண்ணினாய் நீ.

பிரிந்தேன் உன்னைநான் இன்றுமே வாழ்கிறேன்
இருந்தும் நடைபிணமாய் இங்கே - வருந்தியே
டெலீட் பண்ணி லவ்வை நீபோக ஹார்ட்டோ
டெட்பாடி ஆனது பார்.

பேரடைசில் நானிருக்க லிவிங்டு கெதரில்நீ
சீராக வாழ்கின்றாய் செல்ஃபி - ஷேர்பண்ணி
டயர்டாகிப் போனேன்நான் லவ்வில் இனிமேல்
பயமில்லா சாவுதான் பெஸ்ட்.

வெயிட் பண்ணவில்லை நீயெனக்கோ வாழ்க்கை
பெயினோடு லாஸ்பண்ணிப் போனதே - சைடில்
பைசொல்லிப் போனாய்நீ பாவம் இங்கென்
டையானது லவ்வுமே தான்.

கேர்ள்என்றால் லைஃப்என்று இல்லைநீ இந்த
வேர்ல்டில் மோர்ஆப்ஷன் மேப்பார்ப்பாய் - மார்டனாக
மூவ்ஆன்நீ பண்ணியே முன்னேறு வாழ்வினில்
ஜாய்ஆகிப் போகுமே மைண்ட்.

ஆல்ஆர் லிஷன்நீ டோன்ட்லவ் எனச்சொல்லி
பீலாய்ப் புலம்பாமல் பீகூலாய் - மேலேயே
லவ்எவ்ரி திங்பண்ணி லவ்லி லைஃபைநீ
என்ஜாய் பண்ணுவாய் நவ்.

#ஓவியத்திற்கு_ஒப்பனையாய்_நானும்
#காவியத்திற்கு_கற்பனையாய்_அவளும்

No comments:

Post a Comment