Sunday, May 17, 2026

முடக்கிப்போட்ட முப்பது ஆண்டுகள்...!

டூதௌஸண்ட் ஒன்னில் டிக்ளேர்நீ பண்ணியிருந்தால்
நோடவுட் நூறு சதவிகிதம் - விக்டரியே!
லேட்டாநீ வந்ததால் லாஸாச்சே பாஸ்போர்ட்!
தியேட்டரே உனக்கு ரைட்!
​நோடவுட் என்றுநீ நோகாமல் சொன்னாயே
டூட்டி  மறந்துநீ ட்வீட்மட்டும் - போட்டாயே!
சீட்கிடைக்கும் என்றே சிந்தித்து ஏமாந்த
ஃபேன்ஸெல்லாம் பாவம் ப்ரோ!
​சிஸ்டம் கெட்டுதென்று சத்தம்நீ போட்டாயே
நெக்ஸ்ட்இயர் வருவேனென்று நெஞ்சை - நனைத்தாயே!
ஹாஸ்பிட்டல் காட்டி எஸ்கேப்நீ ஆனாயே
மீடியாவுக்கு ஏது மாஸ்?
​பிளானிங் இல்லாமல் பேட்டிநீ கொடுத்தாய்
ரிலீசிங் தேதியைப்போல் ரோசித்தே - நாட்கடத்தினாய்!
செஞ்சுரி அடித்திருப்பேன் என்றுநீ சொல்வது
காமெடி ப்ரோக்ராம் தான்!
​பாட்ஷா டைமிலே பார்ட்டியை  தொடங்கியிருந்தால்
சிஎம் சீட்டே உனக்குத்தான் - நோடவுட்!
இப்போது சொன்னால் சிரிப்பாரே சின்னப்பிள்ளை!
வாட்இஸ் திஸ் சூப்பர் ஸ்டார்?
​ஸ்பிரிச்சுவல் பாலிடிக்ஸ்  என்றுநீ ஸ்டார்ட் பண்ண
இப்பாரில் ஃபேன்ஸெல்லாம் வெயிட்டிங்கில் - ஏங்கினாரே!
இமயம்நீ ஓடி எஸ்கேப்நீ ஆனதால்
ஃபுல்மேஜாரிட்டி போச்சே ப்ரோ!
​நௌஆர் நெவர்  என்றுநீ பஞ்ச்வசனம்
பேப்பரில் ஸ்டேட்மெண்ட்டாய் பிரிண்ட்நீ - செய்தாயே!
நெவர்தான் என்றுநீ நெகடிவ்வாய் முடித்தபின்
பேட்டிஏன் இந்த டைம்?
​இருபது வருடம் லேட்டாய்நீ யோசித்து
சக்சஸ் கிடைத்திருக்கும் என்றுநீ - சொன்னாயே!
ஜோக்காக இருக்குது நீசொன்ன ஸ்டோரி!
இனிமேல்ஏன் இந்த டாக்?
​கோட்டைக்கு போகாமல் தியேட்டருக்குள் நீயிருந்து
நோடவுட் விக்டரியென்று நையாண்டி - செய்கிறாய்!
கூட்டணி வைக்காமல் கூலாய்நீ சொன்னதிந்த
ஃபேண்டஸி ரொம்ப டூமச்!
​முப்பது வருடம் மிரட்டியே பாலிடிக்ஸில்
எண்ட்கார்டு போட்டாயே ஏமாற்றி - ஃபேன்ஸை!
ஹன்ட்ரட் பர்சண்ட்வின் பண்ணியிருப்பேன் என்பது
சூப்பரான காமெடி ப்ரோ!

No comments:

Post a Comment