நெஞ்சமுன தென்றேநான் நெறிவகுத்து எழுதியபின்,
அஞ்சலிலா(து) எதிரேநின் றேனின்னும் அகலுகிறாய்...?
உயிர்துடிப்பாய் உனைமட்டும் உள்ளத்தில் ஏற்றபின்னும்,
செயிர்கொள் பனியாயென் சென்னிழலில் மறைகிறாய்...?
நினைவலையில் நானோ நிதமுமே மூழ்கியிருக்க,
மனைநிறை மெய்ம்மையின் மறுகரையில் நிற்கிறாய்...!
கனவினில் உன்னோடு காலங்கள் யான் கழிக்க,
வினவியே கண்ணீர்த் திரையாய் விழிமறைக்கிறாய்...!
தஞ்சமென உன்னைஎன் தனிநெஞ்சில் அடைத்துவைத்தேன்,
நெஞ்சகமே புகலிடமாய் நெருங்கியே பாராயோ...?
கொஞ்சும்என் பேரன்பின் கொள்கையினை நீயறிவாய்,
வஞ்சமிலாத் தூயஎன் வளர்காதல் ஏற்பாயோ...!
#காதலிசம்
No comments:
Post a Comment