Thursday, September 24, 2015

முன்னோட்டம்...

நாம் உண்ணக்கூடிய உணவு வகைகள் குறித்த அக்கறையும்
மரபு வழி அறிவும் மிக உயர்ந்தது.

நம் மரபு முறை உணவுகள், வெறும் பசி போக்குவதாக மட்டுமல்லாமல்,நமக்கு ஆற்றல் தருபவையாகவும் அருமருந்தாகவும் பயன்படுகின்றன...

ஏழைகளின் உணவாக இருந்த தினை, கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை, வரகு,
குதிரைவாலி போன்றவை, இன்று வசதியானவர்களின் உணவாகவும், வியாதியஸ்தர்கள்
உண்ணும் உணவாகவும் மாறிவருகின்றது.

நாளுக்கு நாள் அவற்றின் விலையும்
அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. தேவை அதிகமாகவும் உற்பத்தி குறைவாகவும் இருப்பதால்தான் இந்த நிலை.

நம் விவசாயிகள் பணப் பயிரை விவசாயம் செய்வதால்தான் நமது பாரம்பரிய உணவுகள் அழிந்துவருகின்றன.

பண்டைய தமிழர்களின் ஆரோக்கியமே நமது சிறுதானிய உணவில்தான் அடங்கி இருந்தது.

நிலம், நீர், காற்று மாசு அடைவதால், சுற்றுச்சூழல் சீர்கேடு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தும்
விதமாகவும், மனிதர்களுக்கு, சுற்றுச்சூழல் குறித்த விழிப்பு உணர்வை உண்டாக்கி, பாரம்பரிய உணவு
முறைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவும் துவங்கப்பட்ட சிறு முயற்சிதான் இந்த வலைதளம்..,

மருந்து வாங்கச் செலவிடும் பணத்தில், சிறுதானியங்களை வாங்கிச் சமைத்து உண்ணும் பழக்கத்தை நாம் நம் சந்நதிகளுக்கும் ஏற்படுத்தித் தருவோம்.

அடுத்த தலைமுறையை,
ஆரோக்கியமுள்ள தலைமுறையாக உருவாக்குவோம்...!

கடந்த பதிமூன்று ஆண்டுகால முயற்சியில் பாரம்பரிய உணவுகளைப் பற்றிய ஆய்வில், என்னுடன் ஒத்துழைத்து ஊக்கமளித்த எனது மூத்த மற்றும் இளைய அடுமனையாளர்களுக்கும் இதன்மூலம் நன்றியினை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment