Sunday, October 25, 2015

கேழ்வரகு...

செரிமான மண்டலம் சீராக இயங்கவும் செலவுவைக்கும் பிணிகளை வர விடாமலும்,
வந்த பிணிகள் எளிதாய் நீங்கவும்...

ஆகவேதான்

இந்திய பாரம்பரியமான உணவு வகைகள் அனைவரின் உடலிற்கும் சுற்றுப்புற தட்பவெப்ப நிலைக்கும் ஏற்றவாறு அமைகிறது.

உடலின் கெட்ட கொழுப்பை நல்ல கொழுப்பாக மாற்றும் அற்புதமான சக்தி கேழ்வரகிற்கு உண்டு.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுப்பொருட்களில் மிக முக்கிய சத்தான தானியங்களுள் கம்புக்கு அடுத்து இருப்பது கேழ்வரகு மட்டுமே.

சிறு குழந்தைகள், வளரும் குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் என அனைவருக்கும் ஏற்ற உணவாக கேழ்வரகு.

பெருமளவில் புரதம், பாஸ்பரஸ், இரும்பு, தையமின் மற்றும் ரைபோபிளேவின் வைட்டமின்கள் காணப்படுகின்றன.

இரத்தத்திலுள்ள கொழுப்பையும் மற்றும் கொழுப்பு அமிலங்களையும் கரைத்து கெட்ட கொழுப்பை நல்ல கொழுப்பாக மாற்றும் அற்புத ஆற்றலை படைத்தது கேழ்வரகாகும்.

இதில் பெருமளவில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து, பாஸ்பரஸ், தையமின் மற்றும் ரைபோபிளேவின் வைட்டமின்கள் மற்றும் உயிர்ச் சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன. கேழ்வரகில் உள்ள ட்ரிப்டோஃபேன் (Tryptophan) என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைப்பதோடு மட்டுமில்லாமல் சேதமடைந்த திசுக்களை சரி செய்து உடலின் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் செய்யும்.

கேழ்வரகு மெதுவாக செரிமானமாவதால், தேவையில்லாமல் மற்ற உணவு வகைகள் உண்பது தடுக்கப்படும்,

அதனால் உடல் எடை கூடுவதும் தவிர்க்கப்படும். கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும். நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்தும்.

இதில் இருக்கும் இரும்புச்சத்து ரத்தசோகையை குணப்படுத்தும். உடலின் வெப்பநிலையை சமநிலைப்படுத்தும்.

தேவையில்லாத கொழுப்பை அகற்றி கல்லீரலை வலுப்படுத்தும்.

உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா ஆகிய நோய்களும் குணமாக்கும். குடல் வலுப்பெறும். தாய்ப்பால் சுரக்க பேருதவி புரியும்.

உடலில் ஆக்சாலிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும் தன்மை கேழ்வரகுக்கு உண்டு. அதனால் சிறுநீரக கல் இருக்கும் நோயாளிகள் அடிக்கடி உணவில் கேழ்வரகை சேர்த்துக் கொள்ள கூடாது.

கேழ்வரகு களி, கூழ்,கேழ்வரகு அடை, கேழ்வரகு இட்லி, கேழ்வரகு புட்டு, கேழ்வரகு சேமியா புட்டு, கேழ்வரகு சேமியா உப்புமா , கேழ்வரகு மாவு லட்டு என பல வகைகள் உண்டு.