Monday, November 2, 2020

வாழ்த்துரை- புனிதம் தேடும் புதினம்...

எமது படைப்பான "புனிதம் தேடும் புதினம்" எனும் நூலினை வாசித்துவிட்டு மதிப்புரையாகவே தமது வெளிப்படையான உரையினை நல்கிய "மேட்டுப்பாளையம் அமுதம் புக் ஷாப், தோழர் பாபு அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்...

-----------×----------×----------×----------×----------×----------×----------×----------×----------×----------

அமுதம் புக்ஸ் வழங்கும் மூன்றாம் பாலினத்தவரின் விழிப்புணர்வு நூல் வாசிப்பை நேசிப்பவர்களுக்காக...

      புனிதம் தேடும் புதினம்
   ~~~~~~~~~~~~~~~~~~~~~

மூன்றாம் பாலினத்தவரையும் அழகிய முறையில் உலகிற்கு அறிமுகம் செய்யும் தோழர் கௌதமன் அவர்கள் பாராட்டுக்குரியவர்.

இந்த நூலை வாசிக்கும் அனைவர்களின் மனதிலும் இதுவரை  இவர்களைப் பற்றி இருந்த தவறான நிலைப்பாடு இனி தவிடு பொடியாகிவிடும்.

மானிடப்பிறவியில் மூன்றாம் பாலினமாக பிறந்த திருநங்கை தோழர்களை சமூகம் பார்க்கும் அநாகரீக பார்வையிலிருந்து...

மாறுபட்ட  தொலைநோக்கு பார்வையில் இவர்களை இந்த நூல் மூலமாக அழகிய முறையில் கண்ணியப்படுத்தி இருக்கிறார் நூலாசிரியர்.

இன்றைய காலச்சூழலில் திருநங்கைகளின் சோகம், வருத்தம், தனிமை,  சமூகப்பார்வை, புறந்தள்ளுதல், வீடுகளிலிருந்து கைவிடப்பட்ட இறுக்கமான சூழல் என்ற நிலையிலிருந்து....

இவர்களையும் சக தோழர்களாக கரம்பிடித்து அழைத்து இவர்களின் மெல்லிய உணர்வுகளை மாலையாக்கி மணக்க வைத்திருக்கிறார் தோழர் கௌதமன்.

இவர்களை ஈன்றவர்கள் தான் முதலில் மாறவேண்டும். எந்த சூழலிலும் இவர்களை புறந்தள்ளாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார்.

இனிவரும் அடுத்த தலைமுறையிலாவது இந்த மனமாற்றம் அவசியம் வரவேண்டும் என்பதை நளினமாக சொல்லி இருக்கிறார் கௌதமன்.

திரைப்படங்களிலும், சின்ன திரைகளிலும், தெருக்களிலும், பொது இடங்களிலும் இதுவரை இருந்த கேளிக்கையான சொல்லாடல் போக்கு இனியாவது மாற்றப்பட வேண்டும்.

நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ...? என்ற பாரதியின் வரிகளை வாசிக்கும் போது  நினைவு கொள்ள செய்கிறது இந்நூல்.

மானுடப் பிறவியில் கூன், குருடு, செவிடு நீங்கிப் பிறந்தவர்கள் காட்டும் பரிவு, பேடு நீங்கி பிறந்தவர்களிடம் இல்லை என்கிற உணர்த்தல்  வாசிக்கும் நம் உணர்வுகளை பிழிந்தெடுக்கிறது.

ஏறத்தாழ 110 பக்கங்களில் மிதமான ₹ 70/- விலையில்  தமிழ்கூறும் நல்லுலகிற்கு அறுசுவை விழிப்புணர்வு விருந்து படைத்திருக்கிறார் நூலாசிரியர் கௌதமன்.

நூலில் வடமொழிச் சொற்களோ... அல்லது ஆங்கில சொற்களோ கலக்காமல் அமுதினும் இனிய அழகு தமிழில் செதுக்கி இருப்பது மிக அழகு.

இது போன்ற அழகு தமிழ் சொல்லாடலை மற்ற நூல்களில் நிச்சயம் எதிர்பார்க்க முடியாது.

விடையில்லா வினாக்கள் நாங்கள், எங்களுக்கு வாய்த்த வாய்ப்புகள் வரமல்ல அனைத்தும் சாபங்களே என்ற வரிகள் மனதை சுடுகிறது.

இவர்களின் உணர்வுகளை  இதைவிட சிறப்பாக எவரும் சொல்லிட இயலாது.

நிறைவாக வணிகம் மற்றும் சுயநலம் சார்ந்த பரபரப்பான இன்றைய காலச்சூழலில்....

இந்த மூன்றாம் பாலினத்தவரையும் உலகில் எடுத்துக்காட்டாக முற்படுத்த வேண்டும் என்ற முனைப்பிற்கு நூலாசிரியருக்கு விருது கொடுக்க வேண்டும்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தரமான படைப்பு. வாசிப்போம் விழிப்புணர்வு பெறுவோம்.

நகரில் நல்ல நூல்களின் நந்தவனம் அமுதம். இது அறிவுலகவாதிகளின் நல் அடையாளம்!

உங்களின் ஒரு அழைப்பு இல்லம் தேடி நூல்கள் வர ஏதுவாகும் மறவாதீர்கள்!

AMUTHAM BOOKS, MTP. 98430 24980 ~ 94864 11900.

#வேறென்ன_வேண்டுமெனக்கு

No comments:

Post a Comment