மானாவாரி நிலத்திலும் கூட
மகசூலை பெருக்கும் ஒருவகை சிறுதானியம்...
மிகக் குறைந்த நாட்களிலேயே
நிறைந்த விளைச்சலை தரும் ஒரு நற்பயிர்...
ஒருவேளை உணவாய் உட்கொண்டாலே
உருக்குலைக்கும் சர்க்கரைநோயும் உருக்குலைந்து போகும்...
உடலுக்கு வலுசேர்க்கும் இரும்புச்சத்தும்
நரம்பிற்கு முருக்கேற்றும் நார்ச்சத்தும்...
தளர்ந்த தசைகளை கட்டுக்கோப்பில் வைக்கும்
அளவான சுண்ணாம்புச் சத்தும்...
அளவின்றி கொடுக்கும்
அக்ஷயப் பாத்திரமாய் குதிரைவாலி...
No comments:
Post a Comment