Showing posts with label தினை.... Show all posts
Showing posts with label தினை.... Show all posts

Thursday, September 24, 2015

வினை தீர்க்கும் தினை...

" தீராத வினையெல்லாம்
தீர்த்துவைக்கும் அன்னையவள் "
- அம்மன் பாடல்...

" வினைதீர்க்கும் வேல்முருகன் "
- முருகன் மூல வாசகம்...

தெய்வத்தினை வழிபடும் யாவரும் சில கதம்ப மலர்களையும், சில பழ வகைகளோடு சேர்த்து தினை அரிசியால் செய்யப்பட்ட மாவினையும் படையலிடுவர்.

தினை என்பதும் பல்லாயிரம் ஆண்டுகளாக, கிழக்கு ஆசியாவில்
பயிரிடப்படும் சிறுதானிய
வகைகளில் ஒன்றாகும்.

அதுமட்டுமல்ல..

தினை உற்பத்தியில் நம் இந்தியாதான் முதலிடம் வகிப்பதாக விவசாயம் சார்ந்த ஆய்வுக்கூடங்கள் கூறுகின்றது.

மழலையை ஈன்ற அன்னைக்கு, முதலில் தினையைக் கூழாக்கித் தருவதுதான் தமிழர் மரபாக இருந்திருக்கிறது.

பித்தம், கபம் போன்ற பிணியை எளிதில் தீர்க்கும் வல்லமை கொண்டது.வாயுத் தொல்லையைச் சரிசெய்யும் ஆற்றலையும் கொண்டது.

புரதச் சத்து,
நார்ச் சத்து,
மாவுச் சத்து,
கொழுப்புச் சத்து,
கனிமச் சத்து,
இரும்புச் சத்து மற்றும்
பீட்டா கரோட்டின் நிறைந்தது.

வாரம் மும்முறை தினையைப் பயன்படுத்த
வாழ்வில் நலம் பெறுவோம் என்பது என் கருத்து.